கதிர்காம விகாராதிபதி தேரரை மீன் வெட்டும் கத்தியால் தாறுமாறாக வெட்டிச் சென்றவர்கள்.
கதிர்காம வள்ளிகுகை ரஜமகா விகாரையின் விகாராதிபதி தேரர் ரம்புக்வெல சங்கானந்த அவர்கள் மீது நடத்தபட்ட தாக்குதலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நேற்று மாலை விகாரைக்கு வந்த சிலரே இவரை வெட்டிச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்து தேபரவெவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் குறிப்பிட்ட தேரர் ,
" விகாரை தோட்டத்துக்கு நேற்று மாலை வந்த இருவர் மீன் வெட்டும் கத்தியால் என்னை சாரமாரியாக வெட்டினார்கள். நான் இறந்து விட்டதாக எண்ணி விட்டுச் சென்றார்கள். நல்லவேளையாக காப்பற்றப் பட்டேன். எனது விகாரை தோட்டத்தின் காணியை அபகரிக்கவே என்னை கொல்ல முனைந்துள்ளார்கள். இவர்களுக்கு போலிஸ் ஓ.ஐ.சி யும் உதவி செய்கிறார். அதனால்தான் குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் கைது செய்யாமல் இருக்கிறார். அவர் ரத்துபஸ்வல கொலையின் போதும் சம்பந்தபப்ட்டவராவார் என தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment