உள்வீ்ட்டு திருடர்களை உதைக்கப்போகும் மைத்திரி!
நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் அரசியல்வாதிகள் உட்பட சுமார் 10 பேருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் பற்றிய தகவல்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பினர் உட்பட சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இதனை கையளித்துள்ளனர்.
இதன்போது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பது தொடர்பாக 05 யோசனைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி பிரதமரிடம் கலந்தாலோசித்து செயற்ப்படுவதாக தெரிவித்தார்.

Comments
Post a Comment