மதுபோதை தலைக்கேறி பாடசாலைக்குள் விழுந்துகிடந்த உயர்தர வகுப்பு மாணவர்கள் !
பாடசாலைக்குள் உயர்தர மாணவர்கள் மதுபோதையில் விழுந்துகிடந்த சம்பவம் குருநாகல் நகர் பிரபல பாடசாலையில் ஒன்றில் நேற்று இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் உயர்தர மாணவன் ஒருவரின் பிறந்த நாளை முன்னிட்டு பாடசாலைக்கு சாராய போத்தல்களை கொண்டுவந்துள்ள மாணவர்கள் பாடசாலை நேரம் முடிந்த பின்னர் அங்கு விருந்துவைத்துள்ளனர்.
மேலதிக மது போத்தல்களை கொள்வனவு செய்ய அருகில் உள்ள வைன் ஸ்டோருக்கு இரண்டு மாணவர்கள் சென்றுள்ள போது சிவில் உடையில் இருந்த பொலிஸாரால் அவர்கள் இருவரும் விசாரனைக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்.
பிறகு அங்கிருந்து பாடசாலைக்கு வந்து பொலிஸார் தேடுதல் நடத்திய போது பாடசாலைக்குள் போதையில் விழுந்து கிடத்த எட்டு பேர் இனங்காணப்பட்டுள்ள அதேவேளை வெளியே தப்பிச்சென்று பாதையில் விழுந்துகிடந்த இரு மாணவர்களும் இணங்கானப்பட்டுள்ளனர்.


Comments
Post a Comment