காலியில் நில அதிர்வு!

காலி ஹபுகல பகுதியில் சிறியளவிலான நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இன்று அதிகாலை இந்த அதிர்வு உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

எப்படியிருப்பினும் இது தொடர்பாக பிரதேசவாசிகளிடமிருந்து தகவல் கிடைத்துள்ளதாக காலி மாவட்ட அர்த்த முகாமைத்துவ உதவி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அது நில அதிர்வுதானா என்பது தொடர்பாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தற்போது ஆய்வுகள் நடத்தபட்டு வருவதாகவும் மக்கள் இது தொடர்பாக அச்சமடையத்தேவையில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments