ஆறரை கோடி செலவில் உறுப்பினர்கள் வெளிநாட்டு விஜயம்!
நான்கரை கோடி ரூபாய் நிதியினை செலவு செய்து மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் ரஸ்யாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
30 பேர் அடங்கிய முதலாவது குழு நாளை புறப்படுவதுடன், மேலும் 30 பேர் அடங்கிய குழுவும் இன்னும் இரண்டு மாதங்களில் ரஸ்யாவிற்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
கைத்தொழில், தொழில்நுட்பம் மற்றும் அபிவிருத்தி கொள்கைகளை ஆய்வு செய்யும் நோக்கில் இந்த சுற்றுப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பாக மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்கவிடம் வினவிய போது,
மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் இந்த சுற்றுப் பயணம் இதற்கு முன்னர் இருந்த ஆளுநர் காலத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபையின் குறித்த யோசனை கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப் பயணத்திற்காக ரூபாய் ஆறரை கோடி நிதி கணக்கிடப்பட்டிருந்தது.


Comments
Post a Comment