மஹிந்த தலைமையில் முஸ்லீம் குரல் ..
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மஹிந்தவுடன் முன்னோக்கி செல்வோம் என்ற தொனிப்பொருளில் புதிய மக்கள் சக்தி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எ எச் எம் அஸ்வர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்.
நாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான ஒரு அலை உருவாகியுள்ளது.சுதந்திர கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்குமாறு முன்னாள் ஜனாதியிடம் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.அவர் இது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானத்துக்கு வரவில்லை.ஆனால் அவர் தலைமையில் மக்கள் சக்தி ஒன்று உருவாவதை தவிர்க்க முடியாது. மஹிந்தவுடன் முன்னோக்கி செல்வோம் என்ற தொனிப்பொருளில் புதிய மக்கள் சக்தி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மக்கள் சக்தியில் முஸ்லீம்களின் குரலும் ஒலிக்க உள்ளது. அதற்காக நாம் மஹிந்தவுடன் முன்னோக்கி செல்வோம் என்ற தொனிப்பொருளுடன் "முஸ்லிம் குரல்" என புதிய குரலை உருவாக்கவுள்ளோம்.அதற்காக இலங்கை பூராவும் உள்ள முஸ்லீம் அரசியல் பிரதிநிதிகள் பலர் எம்மோடு கைகோர்க்க உள்ளனர்.
இன்று நல்லாட்சி அரசிலும் முஸ்லீம்கள் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். இவை தொடர்பில் மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். நாம் மஹிந்த தலைமையில் முஸ்லீம்களுக்காக குரல்கொடுப்போம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments
Post a Comment