(படங்கள்) இரு மோட்டார் சைக்கிள்களை பதம்பார்த்த கார். கவலைக்குரிய நிலையில் ஒருவர். காரை விட்டுவிட்டு இருவர் தப்பியோட்டம்.

இன்று காலை 7 மணியளவில் பறிகம பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் கார் ஒன்று இரு மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
கண்டியிலிருந்து பயனித்த கார் வண்டி அதிவேகமாக வந்து இரு மோட்டார் சைக்கிளை பதம்பார்த்துவிட்டு வந்த திசை நோக்கியே திரும்பியிருந்தது. வேகக்கட்டுப்பாட்டை மீறியமையினால் இந்த விபத்து ஏற்பட்டது எனவும் காரில் வந்த இருவரும் சம்பவம் இடம்பெற்ற உடனேயே தப்பிச்சென்றர் எனவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
முதலில் விபத்துக்குள்ளாகிய சைக்கிலில் வந்தவர் பரிகம வத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரின் நிலமை கவலைக்குறியதாக உள்ளதாகவும் வைத்திய சாலையில் அனுமதிக்க சென்ற நபர் தெரிவித்தார்.



Comments
Post a Comment