அன்சார் மீதான தாக்குதல்: மேலும் ஐவரைத் தேடும் மலேசியா பொலிசார்

மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் இப்ராகிம் அன்சார் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மேலும் நான்கு பேரைத் தேடி வருவதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் இப்ராகிம் அன்சார் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து தாக்குதலுக்குள்ளானார்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஏற்கனவே ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் விளக்கமறியல் நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, மலேசிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுடன் தொடர்புடைய நான்கு பேரைத் தேடி வருவதாக மலேசிய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
அவர்களை தலைமறைவாகியுள்ளதாகவும் எனினும், மலேசியாவுக்குள் தான் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Comments
Post a Comment