போலி பேஸ்புக் கணக்கை உருவாக்கியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

போலி பேஸ்புக் கணக்கை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பெயரில் உருவாக்கி அதன்மூலம் பெண்களை ஏமாற்றிய சந்தேகநபருக்கு விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19-ம் திகதி வரை அவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் போலி பேஸ்புக் கணக்கை நியுசிலாந்தில் இருந்து இயக்கியுள்ளதாகவும், அவர் இலங்கை வந்த போது கைது செய்யப்பட்டதாகவும் இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியை பரிசோதனை செய்வதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments