மஹிந்தானந்தவிற்கு எதிராக வழக்கு!
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவர் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலப் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் விளையாட்டு சங்கங்களுக்கு, சுமார் 53 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை வழங்குவதாக கூறி அதனை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த உபகரணங்களை விளையாட்டுத்துறை அமைச்சின் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லாமை தொடர்பில் அப்போது விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் களஞ்சியசாலைக்குப் பொறுப்பாக இருந்த நிஷங்க குணசேகர மீதும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.


Comments
Post a Comment