இன்றும் மலையகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள்!
மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தி அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பளக் கோரிக்கையை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் அக்கரப்பத்தனை நகரில் இன்று காலை 8.30 அளவில் ஒன்றுகூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு, எதிர்வரும் தீபாவளி தினத்திற்கு முன்னதாக தமக்கு 1000 ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார்கள்.
கிளாஸ்கோ, ஆக்ரோயா, நெதர்ஸ்டன், டொரிங்டன், மண்ராசி மற்றும் அயோனா தோட்டப் பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அக்கரபத்தனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதே வேளை ஹட்டன் -கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலிய பிரதான வீதியை மறித்து மல்லியப்பு சந்திக்கருகில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது சம்மபளத்தை 1000 ரூபாவாக உயர்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பண்டாரவளை பூணாகலை தோட்ட மக்களும் தமது சம்பள உயர்வை கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments
Post a Comment