இ.தொ.காவின் அடையாளம் இந்திய வம்சாவளியினர்களே !

தற்பொழுது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல் ரீதியில் பின்னடைவாக இருப்பது நிரந்தரமானதல்ல 1977க்குப்பின் அரசியல் ரீதியாக கட்சிக்குள் புகுந்த புதிய சந்தர்ப்பவாதிகளைக் கண்டு மயங்கிய சௌமிய மூர்த்தி தொண்டமான்  முதல் அவரின் பேரன் ஆறுமுகம் தொண்டமான்வரை இந்த புதிய முகங்களை அரசியலில் அறிமுகப்படுத்தியதால் உண்மையான இ.தொ.கா  விசுவாசிகள் ஒதுக்கப்பட்டார்கள்.

77க்கு பின் வந்த புதிய அரசியல் சந்தர்ப்பவாதிகளே பழையவர்களை அகற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அவர்கள் இருந்தால் இவர்களை மதிக்கமாட்டார்கள் என்ற காரணத்தால் உண்மையானவர்கள் ஓரம் கட்டப்பட்டார்கள் அதன் பின்னரே இந்த புதியவர்கள் இ.தொ.கா வின் சரித்திரத்தை வசதிக்குயேற்ப மாற்றிபேச ஆரம்பித்தார்கள்

இவர்களைப்பற்றிய திடுக்கிடும் விபரம் என்னவென்றால் இவர்கள் யாரும் எந்த உயர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டாலும் இவர்கள் இ.தொ.காவின் அங்கத்தவராக அங்கத்துவ பணம் செலுத்தி அங்கத்தவராக இருக்கவில்லை என்பதேயாகும்.

இவர்கள் கட்சியில் அங்கத்தவராக இல்லாது கட்சியை பற்றியோ அதன் அங்கத்தவர்களைப்பற்றியோ பேசுவதற்கு எந்த உரிமையும் கிடையாது இருந்தும் பலர் இ.தொ.காவை பயன்படுத்தி அரசியல் பதவிகளை பெற்றுக்கொண்டு விலகிவிட்டார்கள்.

இதுவரை இடையில்வந்தவர்கள் இவர்களே விலகி சென்றவர்களும் இவர்களே இனிமேல் விலகினாலும் அங்கத்துவத்தை இதுவரை பெற்றுக்கொள்ளாமல் இ.தொ.காவில் பதவிவகிப்பவர்களே யாகும்.

அங்கத்தவர்களாக இருக்கும் அப்பாவி தொழிலாளர்கள் இதைவிட்டு சிலவேளை ஒதுக்கப்பட்டு  இருக்கலாம் ஆனால் அவர்ள் ஒதுங்கியவர்கள் இல்லை .இ.தொ.கா இன்றுவரை இந்தியா வம்சாவளிமக்களை பிரதிநித்துவம்படுத்தும் இயக்கமாகும்.

எனவே தற்போது இதன் உயர்மட்ட தலைவர்கள் 1977க்கு சென்று அப்போது காலம்சென்ற தலைவர் தொண்டமானுடன் இருந்தவர்களை அறிந்து அவர்களை ஒன்றிணைத்து மீண்டும் அதன் சக்தியை வெளிபடுத்த வேண்டும்.

இதை தற்போதைய தலைமைத்துவம் இந்தியா வம்சாவளியிள மக்களுக்காகவும் இ.தொ.கா ஆரம்பிக்கப்பட்ட கொள்கைக்காகவும் இப்பொழுதே நடவடிக்கை எடுக்கவேண்டும் 77க்குப்பின் இ.தொ.காவினால் உருவாக்கப்பட்ட சந்தர்ப்பவாதிகள் ஒதுங்கியதால் இக்கட்சி இப்பொழுது புனிதம் அடைந்துவிட்டது என கருதலாம்.

Comments