இரத்தினபுரி பிரதேச மாணவர்களுக்கு நிவாரணம் வேண்டும்!
மத்திய மாகாண தமிழ்மொழி பாடசாலைகளில் 2017 ஆம் ஆண்டு உயர் கல்வியை தொடர்வதற்காக விண்ணப்பித்த இரத்தினபுரி பிரதேச மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் பெரிதும் பாதிப்புகளுக்குள்ளாகி இருப்பதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி மாவட்டத்தின் தமிழ்மொழி மூலம் பாடசாலைகளில் உயர்தரப் பிரிவுகளில் கலை, வர்த்தகப் பிரிவுகள் மாத்திரமே போதிக்கப்பட்டு வருகின்றனர். விஞ்ஞான, கணித பிரிவுகளில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்கள் மத்திய மாகாணத்திற்கே செல்கின்றனர். தற்போது, இம் மாணவர்களுக்கு அங்கும் கதவடைப்பு செய்யப்பட்டிருப்பதால், உயர்கல்வியை தொடர வழியின்றி மாணவர்கள் அல்லல்படுகின்றனர்.
இலங்கை ஒரு சுதந்திர நாடு என்ற வகையில், எமது பிள்ளைகள் நாட்டின் எப்பாகத்திலும் கல்வியைக் கற்றுக்கொள்ளவும், பரீட்சைகளுக்கு முகங்கொடுக்கவும் உரிமையுண்டு. அதனை தமிழ் மாணவர்களுக்கு இல்லாமற் செய்வது பொருத்தமற்றதொரு விடயம் என்றும் பெற்றோர் சுட்டிக் காட்டுகின்றனர்.
எனவே, இரத்தினபுரி மாவட்ட மாணவர்களின் உயர் கல்விக்கு உதவும் முகமாக உடனடியாக சகல பிரிவுகளையும் கொண்ட தாக ஒரு பாடசாலையைக் கட்டியெழுப்பு மாறு பிரதேச மக்களும், பெற்றோர்களும் வேண்டுகின்றனர்.

Comments
Post a Comment