சாதாரண தரப் பரீட்சையில் இம்முறை  இலங்கை, உலக சாதனை!

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் 7 இலட்சத்து 15 பேர் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை வரலாற்றிலும் மற்றும் உலகில் சனத்தொகையை அடிப்படையாக கொண்டு நாடொன்றில் நடக்கும் பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் அதிகமான மாணவர்கள் தோற்றும் பரீட்சையாக அமையுமென பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பரீட்சை டிசம்பர் 6 முதல் 17 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments