Skip to main content

“இனி அந்த முடிவுக்கு செல்லமாட்டோம்” என்கிறது அரசாங்கம்





இந்திய அரசாங்கத்தின் அனுமதியுடனேயே சம்பூர் அனல் மின் நிலையத்தை   நிர்மாணிக்கும் பணியை கைவிட்டோம். இதற்குப் பின்னர் அனல் மின்நிலையம்  அமைப்பதில்லையென்று அரசாங்கம் முடிவெடுத்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனராட்ன தெரிவித்தார்.
எமது நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தியாவின் அம்புலன்ஸ் சேவை பொதுமக்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும். தொடர்ந்தும் அவ்வாறே  இலவச சேவையை முன்னெடுப்போம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

Comments