வைத்தியசாலை மாடியிலிருந்து விழுந்து முதியவர் பலி!

அம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முதியவர் ஒருவர் வைத்தியசாலையின் மாடியிலிருந்து விழுந்து உயிரிந்துள்ளதாக பெரிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மனநோய் காரணமாக குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 85 வயதான முதியவர் ஒருவரே இவ்வாறு விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து அம்பாந்தோட்டை பொலிஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Comments