விபத்தில் நபரொருவர் சம்பவ இடத்திலேயே பலி!

மாத்தறை – கொழும்பு பிரதான வீதியின் காலி மாகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில், நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 12.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி மாகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய டிக்ஷன் ஜயலத் என்பவர் மோட்டார் சைக்களில் தனது வீட்டிற்கருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு செல்லும் வழியில் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி அதிவேகத்துடன் பயணித்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இதன்போது, இவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments