Skip to main content

நீதமன்ற உத்தரவினையடுத்து வைத்தியர்கள் வெளியேற்றம் ; வாகனங்களின் டயர்கள் செயலிழப்பு ; வைத்தியர்கள் குற்றச்சாட்டு


கல்வி அமைச்சிலிருந்து வெளியேறுமாரு கடுவலை  நீதமன்றம் அறிவித்துள்ள நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்வியமைச்சின் முன் நிறுத்திவைக்கப்பட்ட வைத்தியர்களின் வாகனங்களிலுள்ள டயர்கள்  செயழிலக்க செய்யப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியள்ளது.
தரம் ஒன்றிற்கு தமது பிள்ளைகளை சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் கலந்துரையாட கல்வியமைச்சரை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நேற்று (14) கல்வியமைச்சில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள்  கூடியிருந்தனர்.
இதேவேளை இன்று காலை மீண்டும் கல்வியமைச்சின் முன்னாள் வைத்தியர்கள் கூடியிருந்த நிலையில் கடுவலை நீதமன்றம் வைத்தியர்களை வெளியேறுமாரு உத்தரவிட்டிருந்ததையடுத்து வைத்தியர்கள் கலைந்துச்சென்றுள்ளனர்.
எவ்வாறாயினும் கண்டி, மாத்தறை மற்றும்  குருநாகல் போன்ற மாவட்டங்களில் பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை 8 மணியிலிருந்து 12 மணிவரை இடம்பெற்றதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Comments