புதிய பொலிஸ் அவசர சேவைக்கான தொலைபேசி இலக்கங்கள்!

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலுள்ள மக்களுக்காக இந்த புதிய இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை தமிழ் மொழியில் முன்வைக்க புதிய பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கங்கள் இரண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அந்த தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு….

0766 22 49 49 மற்றும் 0766 22 63 63 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலம் தமிழில் சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த சேவை வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Comments