வெள்ளிக்கிழமைக்கு பதில் வியாழக்கிழமைக்கு மாற்றப்படும் சந்திப்பு!

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெற்றுவருகின்ற பொலிஸ் மா அதிபருக்கும் மக்களுக்கும் இடையிலான சந்திப்பு இம்முறை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (16) பெளர்ணமி தினம் என்பதாலேயே இச்சந்திப்பு முன்கூட்டி நடத்தப்படவுள்ளது.

இதன்படி  எதிர்வரும் வியாழக்கிழமை  காலை 8.30 மணியிலிருந்து 12 மணிவரையில் பொலிஸ் தலைமையகத்தில் மக்கள் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Comments