சர்வதேச அளவில் பெண்களை கடத்தியவர் கைது!

ராஜஸ்தானின் – ரூப்நகர் பகுதியில் சர்வதேச அளவில் ஆட்கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த இந்தியர் ஒருவர் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிக்கின்றன.

இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்களை கடத்தும் குற்றச் செயலை அவர் மேற்கொண்டு வந்துள்ளார்.

இவ்வாறு பெண்களை கடத்துவதற்கு அவர் இலங்கையை கேந்திர நிலையமாக பயன்படுத்தி வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் பெண்களை மத்தியகிழக்கு நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் அனுப்புவதற்கான போலி ஆவணங்கள் டெல்லியிலும், கொழும்பிலும் அவரால் தயாரிக்கப்பட்டுள்ளது.

அவரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Comments