முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி...
உலகம் முழுவதும் இன்று ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் தான் மட்டற்ற மகிழ்ச்சியடைவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது...
பல சிரமங்கள் மற்றும் தியாகங்களுக்கு மத்தியில் இலங்கை மற்றும் உலக நாடுகளில் உள்ள பல மொழிகளை பேசும் பல கலாசார பின்னனிகளை கொண்ட முஸ்லீம்கள் லட்சக்கணக்கில் சவுதி அரேபியாவின் மக்கா நகரில் ஒன்று கூடியுள்ளனர்.அவர்களது இந்த ஒன்று கூடல் தியாகத்தை எமக்கு எடுத்துக்கூறுகிறது.அந்த தியாகத்தின் ஊடாக அவர்கள் எதிர்பார்க்கும் அடைவுகளை அனைத்து மக்களும்பெற்றுக்கொள்ள வேண்டும் என நான் பிரார்த்தனை செய்கிறேன்.
இலங்கை முஸ்லீம்கள் எமது நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் மற்ற இணங்களின் மகிழ்ச்சிக்காகவும் பாரிய பங்காற்றியுள்ளனர். நூற்றாண்டுகளாக எமது நாட்டில் உள்ள சகல இனங்களுடனும் சகோதரத்துடனும் சகவாழ்வுடன் வாழ்ந்து வந்துள்ளதுடன் தற்போதும் அதனை பேணி வருகின்றனர்.
மேலும் முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடிந்ததால் கிழக்கு மற்றும் வடக்கு முஸ்லீம்களும் இன்று அச்சமின்றி இந்த நாளில் அனைவதினதும் மகிழ்ச்சியுடன் பெருநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதினையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்றைய தினம் முஸ்லீம்கள் சகலரும் மேற்கொள்ளும் விஷேட மத அனுஷ்டானங்களின் ஊடாக உலகில் பரந்து வாழும் சகல மக்களுக்கிடையே சாந்தியும் சமாதானமும் மலரவேண்டும் என தான் பிரார்த்தனை செய்வதாக அவர் வெளியிட்டுள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

Comments
Post a Comment