#குர்பானி_பிராணியை_அறுக்கும்_முன்______கவனிக்க_வேண்டியவை

.
பிராணியை அறுக்கும் முன் கத்தியை கூர்மையாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். கூர்மையற்ற கத்தியினால் அறுத்து பிராணியை சித்திரவதைச் செய்யக் கூடாது.

கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் கட்டளையிட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன், 'ஆயிஷாவே! கத்தியை எடுத்து வா; அதைக் கல்லில் தீட்டி கூர்மையாக்கு' என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது 'பிஸ்மில்லாஹ்' என்று கூறிவிட்டு, 'இறைவா! இதை முஹம்மதிடம் இருந்தும், முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும், முஹம்மதின் சமுதாயத்தாரிடம் இருந்தும் ஏற்றுக் கொள்வாயாக!' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
நூல்:முஸ்லிம்
நாமே அறுக்க வேண்டும்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தம் கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் ('பிஸ்மில்லாஹ்') கூறினார்கள். தக்பீரும் ('அல்லாஹு அக்பர்') கூறினார்கள். மேலும், தம் காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக் கொண்டு அறுத்)தார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்;- புகாரி

எல்லா உயிரினங்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நீங்கள் (கிஸாஸ் – பழிக்குப் பழி) வாங்கும்போது கொலை செய்தால் அழகிய முறையில் கொலை செய்யுங்கள்! நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹிதாத் இப்னு அவ்ஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா

குர்பானி அறுக்கும் முறைகள்....
================================
குர்பானி கொடுப்பவர் தனது கையால் அறுத்துக் கொடுக்க வேண்டும் .
கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ளவேண்டும் .
அறுக்க தெரியாதவர்கள் அறுப்பவரின் கையை லேசாக பிடித்துக் கொண்டு தக்பீர் சொல்ல வேண்டும் .

௬ட்டுகுர்பானி கொடுப்பவர்கள் ஒருவர் அறுக்க மற்றவர்கள் தக்பீர் சொல்லிக் கொண்டால் போதுமானது ,

குர்பானி கொடுக்கும் இடத்தில் குடும்பம் நின்று கொண்டு தக்பீர் சொல்லலாம்.
குர்பானி பிராணியின் முகம் கிபுலாவின் பக்கம் திருப்பி வைக்க வேண்டும் .
தேவையான அளவிற்க்கு கால்களை பிடிக்க வேண்டும் .
கத்தியை கழுத்தில் அழுத்தி ஒரே அறுப்பில் நாங்கு நரம்புகள் அறுபட அறுத்து முடிக்க வேண்டும்.

மூச்சுக்குழாய்,உணவுக்குழாய்,தொண்டையிலுள்ள இரண்டுஇரத்தம்ஓடும்குழாய்,ஆகியநான்கும் துண்டிக்கும்விதமாக அறுக்கவேண்டும்.
அறுத்த பிறகு இரத்தம் முழுமையாக வெளியான பிறகு சுத்தம் செய்ய வேண்டும் .

குறிப்பு : அதன் துடிப்பு வலியால் அல்ல ! இரத்தம் வெளியாவதினால் ! ஏற்படக்கூடிய துடிப்பு மட்டுமே ! என்பது ஆராச்சி உண்மை !

அறுக்கக் கூடாத முறைகள் !!!
---------------------------------------------------------
கூர்மையில்லாத கத்தியால் அறுத்து அதை துன்புறுத்தக் கூடாது .
கயிற்றால் கட்டி அறுக்கக் கூடாது.
கழுத்தை துண்டாக அறுக்கக் கூடாது.
பழக்கமில்லாதவர்கள் அறுக்க கூடாது
பிறருக்காக உழ்ஹிய்யா கொடுக்கும் ஒருவர் இறைவா! இதை இன்னாருக்காக ஏற்றுக் கொள்வாயாக என்று சொல்வதில் தப்பில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் இறைவனின் பெயர் சொல்லி ஒரு ஆட்டை அறுத்துவிட்டு இறைவா! இதை முஹம்மதிடமிருந்தும் அவருடைய குடும்பம், அவருடைய சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக என்று பிரார்த்தனை செய்தார்கள்.
நூல்;- முஸ்லிம்

Comments