த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பயமுறுத்தலா?
மக்களின் பிரச்சினைகளை மக்கள் ஊடகங்களுக்கு தெரிவிப்பதை தொடர்ந்தே அவ்வாரான பிரச்சினைகளில் தமிழ் மக்கள் சிக்கி தவிப்பதை தெரிந்துக்கொள்ளும் கூட்டமைப்பினர் அது சம்பந்தமாக எதுவித நடவடிக்கைகளையோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சு அல்லது அமைச்சர்களுடனோ எடுத்துரைத்து தீர்வுகாண்பதை தவிர்த்தே வருகின்றார்கள்.
ஆனால் மக்களை சந்திக்குபோது மாத்திரம் தாங்கள் அரசியல் செய்வதே தமிழ் மக்களின் உரிமைக்காக என வீர வசனத்தை கூறுகின்றார்கள். தென் பகுதியை சார்ந்த பெரும்பான்மை இன அரசியல்வாதி நேற்று குறிப்பிட்டுள்ள ஊனமுற்ற விடுதலைப்போராளிகளின் தொகை சுமார் 18 ஆயிரத்தை தாண்டி இருந்தாலும் நிவாரணம் பெறுபவர்கள் சுமார் நான்காயிரம் என குறிப்பிட்டுள்ளார்.
நிவாரண தொகை மாதாந்தம் மூவாயிரமே கிடைக்கின்றது இதை இவர்கள் நாளாந்தம் சகல தேவைகளுக்கும் 100ஐயே செலவு செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
இந்த தொகையை கொண்டு எவ்வாறு இவர்களால் தங்களின் நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும் ?இந்த போராளிகள் குடும்பஸ்தர்களாக இருந்தால் இன்னும் மிக மோசமான வாழ்க்கையையே வாழவேண்டி வரும்.
இனத்தின் விடுதலைக்காக போராடிய இவர்கள் இப்பொழுது உணவிற்காக போராடவேண்டிய நிலையில் வாழ்கின்றார்கள் இவர்களின் சக்தியை இனத்திற்காக தியாகம் செய்துவிட்டு இன்று ஊனமுற்றவர்களாகிவிட்டார்கள்.. இவர்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பவேண்டியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே காரணம் இவர்களின் போராட்டத்தினாலேயே பெரும்பான்மை இன அரசியல் தலைமைகள் இன்றும் உங்களை தங்களின் கையுக்குள் வசப்படுத்தி வைத்துள்ளார்கள்.
நமது நாட்டில் சமூக சேவை அமைச்சு இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றோம் இந்த அமைச்சின் மூலம் கூட இவர்களுக்கு நிவாரணத்தை பெற்று கொடுக்கலாம் அதற்காக வரவு செலவு பட்ஜெட் வரும்போது நீங்கள் பாராளுமன்றத்தில் இவர்களின் வாழ்க்கை நிலையை எடுத்துக்கூறி விசேட நிதியாக அதிக தொகை நிதியை இந்த அமைச்சிக்கு ஒதுக்கி அதை சரியான முறையில் இவர்களுக்கு கிடைக்க செய்யலாம் அதெற்கெல்லாம் உங்களுக்கு நேர காலம் கிடைக்காது.
ஆனால் நிதி அமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் மாத்திரம் அவருக்கு ஆதரவாக வாக்களித்து அவரிடம் உங்கள் சுய நலத்திற்காக பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளை பெற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த விடுதலை வீரர்களின் அவயங்களை இழப்பதற்கு நமது நாட்டின் இராணுவமே காரணம் எனினும் அவர்களை பாதுகாக்க வேண்டியதும் அரசின் கடமையாகும் இராணுவத்தினரும் இவ்வாறு பாதிப்பிற்குள்ளானபோதும் அவர்களை அரசு மதித்து தேவையான வசதிகளை செய்திருக்கின்றது என்பதும் உங்களுக்கு தெரியும். நமது இந்த விடுதலைபோராளிகளின் தவறுகளை அரசு மன்னித்துவிட்ட காரணத்தாலேயே இன்றும் இவர்கள் உயிர் வாழ்கின்றார்கள்.
அப்படியானால் இவர்களையும் பாதுகாக்கவேண்டியது அரசுதான் அரசுக்க அழுத்தம் கொடுக்ககூடிய ஒரே இடம் பாராளுமன்றமே அங்கே நீங்கள்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்றீர்கள் இருந்தும் நீங்கள் மௌனம் சாதிப்பது ஏன்?
இந்த நல்லாட்சியிலே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உங்களுக்கும் வாக்களித்த தமிழ் மக்களுக்கும் தங்களின் பிரச்சினைகளுக்கும் அதன் தீர்விற்கும் பங்கு கேட்கும் உரிமை இருக்கின்றது என்பதை சட்ட நிபுணர்களாகிய உங்களுக்கு நாம் கூறி தெரிந்துக்கொள்ள வேண்டியதில்லை.
அப்படியாயின் நீங்கள் பாராளுமன்றில் இவர்களின் பிரச்சினையை எடுத்துகூறுவதோடு அப்பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்று கொடுக்க வேண்டும் ஆனால் உங்களுக்கு ஏதோ மறைமுக பயமுறுத்தல் இருப்பதைபோல் மக்களுக்கு தோன்றுகின்றது.
இவர்களின் பிரச்சினையின் நியாயபூர்வமான காரணிகளை பாராளுமன்றில் எடுத்து கூறினால் நிச்சயம் சிங்கள இன பாராளுமன்ற உறுப்பினர்களும் உதவலாம் ஆனால் நீங்கள் அணைவரும் ஏதோ காரணத்திற்காக மௌனம் சாதிப்பதால் உங்களுக்கு ஏதோ மறைமுக அச்சுறுத்தல் இருப்பதாகவே மக்கள் நினைக்கின்றார்கள் என்பது சரியா ?

Comments
Post a Comment