புலிகள் செய்த தாக்குதல்களுக்கு எவரும் விசாரணை செய்யவில்லை. தமிழர்கள் கொலை செய்யப்பட்டால் மட்டும் ஐ.நா குமுறுகிறது.
இராவணா பலய மற்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
ஆகிய அமைப்புக்களைச் சேர்ந்த பிக்குகள் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் முன்பாக பான் கீ மூனின் வருகைக்கு எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டமொன்றை நேற்று முன்னெடுத்தனர்.இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கும் இடையில் முறுகல் நிலைஏற்பட்டது.
கெப்பத்திக்கொல்லாவை, கண்டி தலதா மாளிகை ஆகிய இடங்கள் மீதான குண்டுத்தாக்குதல், சிறுவயது பெளத்த பிக்குகளின் படுகொலை ஆகிய விடயங்கள் தொடர்பில் புலிகளை எவரும் விசாரணை செய்யவில்லை. அதனால் குறித்த பிரச்சினைகள் தொடர்பிலும் ஐ.நா.பிரதிநிதிகள் கவனமெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்திக்க வருகை தந்த ஐக்கிய நாடுகள் அலுவலக பிரதிநிதி ஒருவரிடத்தில் ஆர்ப்பாட்ட காரர்கள் தமது பரிந்துரைகள் அடங்கிய ஆவணத்தை கையளித்து விட்டு தமது வாகனங்களுக்கு செல்ல முற்பட்ட போது அவ்விடத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் வருகை தந்தார்.
இந்நிலையில் பாதுகாப்பு காரணத்துக்காக வாகனங்களுக்கு சென்றுக்கொண்டிருந்த ஆர்பாட்டகாரர்களை பொலிஸார் இடைமறித்தால் பொலிஸாருக்கு ஆர்பாட்ட காரர்களுக்கு மத்தியில் முறுகல் நிலை ஏற்பட்டது. அதன் போது ஆர்ப்பாட்ட காரர்கள் பொலிஸாரை தள்ளிவிட்டு முன்செல்ல முற்பட்டபோதும் அவர்களின் முயற்சிகள் சாத்தியப்படவில்லை.
அதன் பின்னர் குறித்த இடத்தில் ஐ.நா.பிரதிநிதிகள் பலரின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்ட பதாகைகளை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்ட்தில் ஈடுபட்டனர்.
இதன்போது தேசப்பற்றுள்ள தேசிய பிக்குகள் ஒன்றியத்தின் தலைவர் அங்குனுகல்லே ஜினாநந்த தேரர் தெரிவிக்கையில்,
இதற்கு முன்னர் ஐ.நா. வை பிரதிநிதித்துவப்படுத்தி நவநீதம்பிள்ளை இலங்கை வருகை தந்திருந்தார். அவரும் நேரடியாக முல்லைத்தீவுக்கு சென்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை மாத்திரம் கேட்டறிந்துக்கொண்டு திரும்பிட்டார்.
தமிழர்கள் கொலை செய்யப்பட்டால் குமுறும் ஐ.நா. சிங்களவர்கள் கொலை தொடர்பில் மாத்திரம் ஏன் மௌனம் சாதிக்கின்றது? அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அல் ஹுசைன் வருகை தந்த போதும் சிங்கள் மக்களின் பிரச்சினைகள் குறித்து துளியும் ஆராயப்படவில்லை என்றார்.

Comments
Post a Comment