மூன்று முறை தலாக் இஸ்லாமியத்தில் அனுமதிக்கப்படுகிறது – அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம்
மத அடிப்படையிலான தனிச்சட்டங்களில் தலையீடு செய்ய முடியாது உச்ச நீதிமன்றத்தில் அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் பிரமாணப் பத்திரம் தாக்கல்
புதுடெல்லி
மத அடிப்படையிலான தனிச்சட்டங்களில் தலையீடு செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
மூன்று முறை தலாக் செய்யும் முறையை நியாயப்படுத்தும் விதமாக இந்தியாவின் உயர்மட்ட இஸ்லாமிய சட்ட வாரியம் சுப்ரீம் கோர்ட்டு மத சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்றும் சமூக சீர்திருத்தம் என்று தனிப்பட்ட சட்டங்களை மீண்டும் எழுதக்கூடாது என்றும் கூறிஉள்ளது.
அனைத்து இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் வழங்கி உள்ள ஆவணத்தில் “மூன்று முறை ’தலாக்’ முறையின் ஏற்புடைமை உச்ச நீதிமன்றத்தில் முடிவுசெய்ய முடியாது,” என்று கூறி உள்ளது.
மூன்று முறை தலாக் இஸ்லாமியத்தில் அனுமதிக்கப்படுகிறது, கணவர்கள் ஒரு அவசரம் இல்லாமல் ஒரு சிறப்பான முடிவை எடுக்க முடிகிறது மற்றும் விவகாரத்து விவகாரத்தில் உண்மையான காரணம் இருக்கும் பட்சத்தில் பயன்படுத்தப்படுகிறது. திருமணம், விவாகரத்து மற்றும் கையாளுதல் மதத்திற்கு மதம் வேறுபட்டு உள்ளது. “ஒரு மதத்தின் ஏற்புடைய உரிமைகள் குறித்து கோர்ட்டு கேள்வி எழுப்ப முடியாது. குர்-ஆன் படி விவகாரத்து என்பது அடிப்படையில் விரும்பத்தகாதது ஆனால் தேவைப்படும் போது அனுமதிக்கப்படுகிறது,” என்று கூறி உள்ளது.
இஸ்லாமிய கொள்கை பற்றி அபிடவிட் கூறுகையில், தம்பதியினர் இடையே கசப்புத்தன்மை இருக்கையில் திருமண வாழ்வை கலைத்துவிடுவது நல்லது, என்று கூறப்பட்டு உள்ளது. இஸ்லாமிய ஆண்கள் ஒருதலைப்பட்ச அதிகாரத்தை அனுபவிக்கிறார்கள் என்பது தவறான கருத்து. இஸ்லாம் பலதார திருமணத்தை அனுமதிக்கிறது, ஆனால் அதனை ஊக்குவிக்காது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இஸ்லாமிய வழக்கப்படி “தலாக்’ என்ற வார்த்தையை பிரயோகித்து விவகாரத்து செய்து கொள்ளும் நடைமுறை காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையால் பெண்களுக்கு பாரபட்சமான நீதி வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.இம்முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது குறித்து பதிலளிக்கும்படி, அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்டோருக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, ‘நோட்டீஸ்’ அனுப்பியது.முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை “தலாக்” என கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை அரசியல் சாசன விதிகளின்படி ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
சமீபத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த இஷ்ரத் ஜகான் என்ற பெண் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றது. இஷ்ரத் ஜகான் தன்னுடைய மனுவில், என் கணவர், தொலைபேசியில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெற்றுள்ளதாக அறிவித்து விட்டார். ஏழு முதல், 12 வயதுள்ள என் மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனை தன் கட்டுப்பாட்டில் அவர் வைத்து உள்ளார். இஸ்லாமிய தனிநபர் சட்டத்தின் இந்த விவாகரத்து முறையால், என்னைப் போல, நாடு முழுவதும் பல பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சட்டப் பிரிவு செல்லாது என்று அறிவிக்க வேண்டும். தனிநபர் சட்டம், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் அறிவிக்க வேண்டும். என் கணவர் தொலை பேசியில் மூன்று முறை தலாக் என்று கூறி பெற்ற விவாகரத்து செல்லாது என்று அறிவிப்பதுடன், எனக்கும், என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:சமூக சீர்திருத்தம் என்ற பெயரில், மத அடிப்படையிலான தனிச்சட்டங்களை திருத்தி எழுத முடியாது. முஸ்லிம் மதத்தில் பின்பற்றப்படும் பலதார மணம், தலாக் முறை, நிக்கா ஹலாலா ஆகியவை சட்டக் கொள்கை தொடர்புடையது. இதில் தலையீடு செய்ய முடியாது. திருமணம், விவாகரத்து, பராமரிப்பு ஆகியவை தொடர்பாக குரான் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைத்தான் முஸ்லிம் தனிச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் நீதிமன்றங்கள் திருத்தம் செய்ய முடியாது. முஸ்லிம் பெண்களின் நலன்களைக் காக்க அவர்களுக்கு என தனிச்சட்டம் உள்ளது என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
Post a Comment