கிண்ணியா கல்வி வலயத்தில் ஓய்வு பெறவுள்ளவர்களுக்கான நடமாடும் சேவை



(இஹ்ஸானா பரீத்)


கிண்ணியா கல்வி வலயத்திலிருந்து ஓய்வு பெறவுள்ள அதிபர்,   மற்றும் ஆசிரியர்களின் சுயவிபரக் கோவையில் உள்ளதன் பொருட்டு இவ் வலயக் கல்வி அலுவலகத்தினால் ஒரு நாள் நட
மாடும் சேவையொன்றினை நடாத்துவதற்கான ஏற்பாடுகள்  செய்யப் பட்டுள்ளது.

இந்த நடமாடும் சேவை கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசுவர்கான் தலைமையில் கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தில் எதிர் வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை காலை காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை இடம் பெறவுள்ளது.

அன்றைய தினம் ஓய்வு பெறவுள்ள அதிபர்,  ஆசிரியர்கள் தவறாது சமூகமளித்து ஓய்வு பெறுவதற்கான தேவையான ஆவணங்களை வழங்கி உதவுமாறும் கிண்ணியா வலயக் கல்விப் பதிப்பாளர் ஏ.நசுவர்கான் கேட்டுள்ளார்.

Comments