வாசகர்கள் அனைவருக்கும் ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்..
இறைத் தூதர்களான இப்றாஹிம் (அலை), அவரது மனைவி ஹாஜரா (அலை), இவர்களது மகனான இஸ்மாயில் (அலை) ஆகியோரின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், உறுதியையும் முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்தும் நாளாகும்.
அர்ப்பணிப்பின் அடையாளச் சின்னமாய் திகழும் தியாகத்திருநாளாம் ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாடும் உள்ளூர் மற்றும் கடல் கடந்து வாழும் அனைத்து வாசகர்களுக்கும் தமது ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்களை கந்தளாய் பேராற்று வெளி நியூஸ் ஊடக வலையமைப்பு தெரிவித்துக் கொள்வதோடு, இந்த புனித நாட்கள் சொல்லித்தரும் படிப்பினைகளை கற்று அதன்படி வாழ்வை நகர்த்தும் ஆற்றலையும் அதற்குரிய பக்குவத்தினையும் எல்லாம் வல்ல இறைவன் நமக்கு வழங்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றது...

Comments
Post a Comment