Posted by
Kantalai News
ஜனாதிபதியும் பிரதமரும் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும் !
அவரை கவுரவிக்கும் நிகழ்வு ஒன்று பதுளை நகரில் இடம்பெற்றது இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்து அங்கு கருத்து வெளியிட்ட அவர்...
ஜனாதிபதி மற்றும் பிரதமர் நாட்டு மக்களுக்கு முன்மாதிரியாக நடக்கவேண்டும்.அப்போது தான் அமைச்சர்கள் மற்றும் மக்கள் சரியான பாதையில் நடப்பார்கள்.நாட்டில் தலைவர்கள் பயணிக்கும் பாதை மாறும் போது நாம் தலையிட வேண்டி ஏற்படும் அதனை தவிர்க்க முடியாது.
இந்த நாட்டில் சிங்கள இனமே பிரதான இனம் அந்த இனத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.அதற்காக நாம் குரல்கொடுக்கும் போது இனவாதம் பேசுவதாக கூறுகிறார்கள். மற்ற இனத்தவர்கள் அவர்களின் இன உரிமைகளை பற்றி அவர்கள் பேசும்போது நாம் அதனை இனவாதமாக பார்ப்பதில்லை. நாம் சிங்கள இனத்தின் உரிமைக்காக பேசும் போது அதனை இனவாதம் என்கிறார்கள்.அதற்காக நாம் மவுனமாக இருக்க முடியாது. பேசவேண்டிய நேரத்தில் பேசவேண்டும் என குறிப்பிட்டார்..

