தாயும் மகளும் கொலை: ஏறாவூரில் சம்பவம்!

மட்டக்களப்பு – ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதியில் வசித்து வந்த தாயும் மகளும் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு இவர்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நூர்முஹம்மது சித்தி ஜனீரா (வயது 55) மற்றும் அவரது மகளான ஜனீரா பானு மாஹிர் (வயது 34 ) ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

வீட்டின் கூரையை கழற்றி வீட்டுக்குள் நுழைந்துள்ள இனந்தெரியாத நபர்களே இக் கொலையை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Comments