Skip to main content

இரண்டு கிலோகிராம் கேரள கஞ்சா வைத்திருந்தவருக்கு அபராதம் 

கேரள கஞ்சா வைத்திருந்த நபரொருவருக்கு 30 ஆணிரம் ரூபா அபராதம் விதித்து வடமத்திய மாகாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபரிடமிருந்து 2 கிலோகிராம் கேரள கஞ்சா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ள நிலையில், நிதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் விற்பனை மற்றும் போபை்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காகவே குறித்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த அபராதத் தொகையை செலுத்தாவிடின் ஆறு மாத கால கடூழிய சிறைத்தண்டனை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபர் அனுராபுரம் பெரினயன்குளம் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

Comments