வவுனியாவில் பொதுபல சேன இன்று போராட்டம்!

பொதுபல சேனா அமைப்பு இன்று வவுனியாவில் போராட்டம் ஒன்றை நடத்த உள்ளது.

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அண்மையில் விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் வாழும் சிறுபான்மை சிங்களவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்படக் கூடாது எனவும், பௌத்த விஹாரைகள் அமைக்கக் கூடாது எனவும் அண்மையில் விக்னேஸ்வரன் கூறியதாக  ஞானசார தெரிவித்துள்ளார்.

Comments