சிறுவன் ஒருவன் கிணற்றில் வீழ்ந்து பலி!

மடோல்சிம – மஹதொவயை சேர்ந்த சிறுவன் ஒருவன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் நேற்று பகல், வீட்டின் அருகாமையில் உள்ள கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

5 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரேத பரிசோதனைக்காக மெடிகஹதென மருத்துவ மனையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

Comments