முன்னாள் நீதிபதி சரத் அப்று வழக்கிலிருந்து விடுதலை!

முன்னாள் நீதிபதி சரத் அப்று குறித்த துஷ்பிரயோக வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் நீதிபதி சரத் அப்றுவின் வீட்டில் வேலைசெய்த வேலைக்கார சிறுமியை பாலியல் துஸ்பிரயோகப்படுத்திய வழக்கின் சந்தேகநபரான அவர் குறித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் நீதிபதி சரத் அப்று கடந்த மாதம் தனது வீட்டின் மேல்மாடியில் இருந்து விழுந்து உயரிழந்திருந்தார்.

அவர் மீதான குறித்த வழக்கை நிறைவுக்கு கொண்டு வர உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே நீதிபதி சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி குறித்த வழக்கின் பிரதான சந்தேகநபரான முன்னாள் நீதிபதி உயிரிழந்துள்ளமையினால் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை சாதாரண சந்தேகங்களால் நிருபிக்க முடியாது என்றும், எனவே அவரை நிரபராதியாக தீர்ப்பளிக்குமாறும் உயர்நீதிமன்றில் கோரியுள்ளார்.

இதனையடுத்து முன்னாள் நீதிபதி சரத் அப்று குற்றமற்றவர் என்றும் முன்னாள் நீதிபதி சரத் அப்று குறித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கு இன்றுடன் நிறைவுக்கு வருவதாக நீதிபதி அறிவித்துள்ளார்.

Comments