பிரதமர் இன்று நியூசிலாந்திற்கு பயணம்!
இன்றைய தினம் பிரதமர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நியூசிலாந்திற்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயின் அழைப்பின் பேரிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியூசிலாந்திற்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
நியூசிலாந்து நாட்டின் பிரதமர் உட்பட முக்கிய அமைச்சர்களை சந்திக்கவுள்ளார். இந்த விஜயத்தின் போது பாதுகாப்பு பொருளாதாரம், பிராந்திய பொருளாதாரம் உட்பட பல விடயங்கள் குறித்து இருநாட்டு பிரதமர்களும் ஆராய உள்ளதாக தெரியவருகிறது.
இது தவிர பால்மா உற்பத்தி தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.ஓக்லாந்து, வைகடோ மற்றும் வொலிங்டன் நகரங்களை அண்டியதாக இடம்பெறும் உத்தியோகபூர்வ வியாபார மற்றும் சமூக நிகழ்வுகள் பலவற்றில் பிரதமர் அடங்கலான தூதுக்குழுவினர் பங்குபற்றவுள்ளனர்.
பிரதமருடன் அமைச்சர்களான சாகல ரத்னாயக்க, ஹரீன் பெர்ணாந்தோ, ராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாந்துபுள்ளே, பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா, பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்க, பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் சரத் ரத்வத்தை, மேலதிக செயலாளர் சமன் அதாவுத ஹெட்டி, பிரதமரின் விசேட உதவியாளர் சண்ரா பெரேரா ஆகியோரும் நியூசிலாந்து பயணமாகின்றனர்.

Comments
Post a Comment