ஒருநாள் நிரம்பிய சிசுவை புதைத்தமை தொடர்பில் விசாரணை!

முந்தல், அங்குனவில பகுதியில் பிறந்து ஒருநாள் நிரம்பிய சிசுவை தாயொருவர் மண்ணில் புதைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக முந்தல் மாவட்ட வைத்தியசாலை தரப்பினரால்  பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (03) காலை இந்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிறந்து ஒருநாள் நிரம்பிய சிசுவை தாயொருவர் தனது வீட்டு வளாகத்தில் நேற்று (02) காலை புதைத்துள்ளதாகவும், இதனையடுத்து தகவலறிந்த குடும்பநல தாதி புதைக்கப்பட்ட சிசுவை மீட்டு, தாயுடன் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சிசு இறந்த பின்னரே தாம் நிலத்தில் புதைத்ததாக தாய் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

21 வயதான தாய் ஒருவரே சிசுவை மண்ணில் புதைத்துள்ளதுடன், அவரின் கணவர் கூலித் தொழிலாளி எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பாக முந்தல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments