கல்வி அமைச்சுக்குள் அத்துமீறி நுளைந்த வைத்தியர்கள்!

அத்துமீறி கல்வி அமைச்சுக்குள் நுளைந்த வைத்தியர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமது பிள்ளைகளை பிரபல பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதில் பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளதாக கூறி வைத்தியர்கள் சிலர் நேற்று மாலை முதல் கலவியமைச்சுக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ளனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய, அதன் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா உள்ளிட்ட அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு கல்வியமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

கல்வியமைச்சினால் முன் வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்து பார்த்த கடுவலை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments