ரோஹிதவிடம் விசாரணைக்கு முயற்சி!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்த, பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
காணிக் கொள்வனவு ஒன்றில் தொடர்புபட்டுள்ளதான குற்றச்சாட்டின் பேரிலேயே, அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரத்மலானையில் அமைந்துள்ள கொட்டன் மில்ஸ் நிறுவனமொன்றுக்குச் சொந்தமான காணியொன்றை, சொத்து அபிவிருத்தி நிறுவனமொன்று கொள்வனவு செய்துள்ளது.
இந்தக் காணி, ரோஹிதவுக்காக வீடொன்றை நிர்மாணிக்கவே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதான தகவலின் அடிப்படையிலேயே, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்யவுள்ளதென்று, மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Post a Comment