தெமட்டகொட சமிந்தவுக்கு நெருக்கமான நண்பர் கைது!

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரன் கொலைச் சம்பவத்தில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் மிக நெருங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

22 கிராம் ஹெரோயினுடன் பம்பலப்பிட்டியில் வைத்து அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிம்சர அமல் எனும் பெயரினால் அழைக்கப்படுபவரே நேற்று மாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பம்பலப்பிட்டி மஜெஸ்டிக் சிட்டி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருளுடன், 40 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Comments