பொலிஸ்மா அதிபரின் பெயரில் பேஸ்புக்கில் மோசடி!
பொலிஸ்மா அதிபரின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கை இயக்கி அதன்மூலம் பெண்களை ஏமாற்றி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளார்.
தற்சமயம் இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தொடர்பில் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு முறையிட்டுள்ளார்.
இந்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நியுசிலாந்தில் இருந்து இலங்கை வந்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.


Comments
Post a Comment