வாகன விபத்துடன் தொடர்புடைய இருவரும் விளக்கமறியலில்!

திருகோணமலை தோப்பூர் செல்வநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுவனும், ரிப்பரின் சாரதியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு சந்தேகநபர்களையும் மூதூர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவர்களை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதவானின் உத்தரவிற்கு அமைய குறித்த சிறுவன் சிறைச்சாலைகள் பராமரிப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், ரிப்பரின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மோட்டார் சைக்கிளொன்றும் டிப்பர் வண்டியொன்றும் மோதி நேற்று (25) பகல் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று (26) முன்னெடுக்கப்படவுள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

செல்வநகர் பகுதியைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயதான இரண்டு சிறுவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளை 14 வயதான சிறுவன் செலுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை அடுத்து மோட்டார் சைக்கிளை செலுத்திய சிறுவனும் ரிப்பரின் சாரதியும் கைது செய்யப்பட்டனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Comments