திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கடற்படை முகாம்கள் அகற்றப்பட வேண்டும் – ஜெனார்த்தனன்




j9
j
திருகோணமலை நகராட்சி மன்ற ஐக்கிய பொதுச் சந்தை பல வருடங்ககளாக கடற்படையினரிடம் வசம் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் கோபாலபுரம் கடற்படை முகாம் மற்றும் கும்புறுப்பிட்டி காந்திநகர் கடற்படை முகாம்கள் அகற்றப்படவில்லை. இது தொடர்பாக கடந்த கூட்டங்களில் முடிவு எடுக்கப்பட்டு அரசாங்க அதிபரால் கடிதம் கடற்படை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப்பட்ட போதும் முடிவு எடுக்க வில்லை.என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் தெரிவ்த்தார்.
இன்று மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் 13ம் திகதி மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற போது.இந்நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலம பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகருப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் தற்போது நல்லாட்சி அரசு இடம் பெற்று வருகிறது.இந்த நிலையில் இவ்விடத்தில் என்? கடற்படைமுகாம் உடன் அகற்றுங்கள் எங்கே உங்களது உயர் மட்ட அதிகாரி தீர்மானம் எடுக்கவல்லவர் உயரதிகாரி ஏன் கூட்டத்திற்கு வரவில்லை இதுபற்றி உடன் நடவடிக்கை எடுங்கள் எனவும் குறிப்பிட்டார். இது தீர்மானம் எடுக்கும் கூட்டம் இங்கு உயர் அதிகாரிகள் பிரசன்னமாக இருக்க வேண்டும் என கடற்படை அதிகாரிக்கு தெரிவித்திருந்தார்.
j-jpg2

Comments