வலுவான சர்வதேச உறவுக்கு ஜனாதிபதியே காரணம்!

ஜனாதிபதி மைத்திரி்பால சிறிசேனவினாலேயே இன்று நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினாலேயே இலங்கைக்கு மிகவும் வலுவான சர்வதேச உறவு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குருணாகலில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது சம்மேளனக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Comments