மஹிந்த கும்பலுக்கு இடையில் கடும் மோதல்!



  • Aswini Auto Ecole
  • Actif Assurance
  • Mohan Jewellery Mart

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முன்னிலைப்படுத்தி புதிய
கட்சியொன்று ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய கட்சி தொடர்பில் தற்போது வரையில் மஹிந்த குழுவுக்கு இடையில் முரன்பாடு ஒன்று ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்சவை பெயரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக அந்த கட்சியின் ஊடாக கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சந்தர்ப்பத்தில் மஹிந்த தனது எதிர்ப்பை கடுமையாக வெளியிட்டுள்ளார்.
“மக்கள் கூட்டம் எனக்காக உள்ளதே தவிர வேறு யாருக்காகவும் இல்லை என்பதனை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு மக்களை காட்டிகொடுக்க முடியாது. அத்துடன் குடும்ப ஆட்சி என்றே மக்கள் திட்டினார்கள். இதனால் மைத்திரியிடம் கூறி நாடாளுமன்ற முறைக்கு இதனை அமைத்துக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். அதன் போது பிரதமராக நான் போட்டியிட முடியும்”... என மஹிந்த ராஜபக்ச இந்த சந்தர்ப்பத்தில் கூறியுள்ளார்.
எப்படியிருப்பினும் இந்த கருத்தின் மூலம் மஹிந்தவின் கோத்தபாயவின் மீதான எதிர்ப்பு நன்கு விளங்குவதாக அங்கிருந்த சிலர் தெரிவித்துள்ளனர்.
எப்படியிருப்பினும் இந்த சம்பவம் இன்னமும் கோத்தபாயவுக்கு தெரியாதென தகவல் வெளியிட்டுள்ள உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments