இலங்கை கிரிக்கட் பிரதானிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக காயத்ரி விக்ரமசிங்க குற்றச்சாட்டு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் வர்த்தக பிரிவின் செயலாளராக பணிப்புரிந்து வந்த காயத்திரி விக்ரமசிங்க என்ற பெண்ணை நிறுவனத்தின் பிரதானிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
.
காயத்திரி, கிரிக்கெட் நிறுவனத்தின் தகவல்களை பத்திரிகைகளுக்கு வழங்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், நிறுவனம் அவரிடம் மேற்கொண்ட ஒழுக்காற்று விசாரணைகளின் போது, அவர் தனக்கு நேர்ந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதானிகள் சிலர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக காயத்திரி விசாரணை நடத்திய அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.
.
இதற்கு முன்னர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விற்பனை பிரிவின் விற்பனை அதிகாரியாக பணிப்புரிந்த நவுச்சலி என்ற யுவதியின் பணி ஒப்பந்த காலத்தை நீடிக்க நிறுவனத்தின் பிரதானி ஒருவரால் பாலியல் இலஞ்சம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
.
எது எப்படி இருந்த போதிலும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில், பணியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த காயத்திரி விக்ரமசிங்கவை மீண்டும் பணியில் சேர்க்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

Comments