ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை!
கொலை குற்றம் தொடர்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு நுவரெலியா உயர்நீதிமன்ற நீதவான் லலித் ஏகநாயக்க மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி தலவாக்கலை டயகம பிரதேசத்தில் 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரை வெட்டி கொலை செய்த குற்றத்திற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
32 / 37 மற்றும் 60 வயதுடைய மூவருக்கே இவ்வாறு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment