சுகாதார அமைச்சர் கட்டாருக்கு விஜயம்!

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கட்டாருக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு அவர் இவ்வாறு கட்டாருக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டாரின் சுகாதாரத்துறை மிகவும் உயர் மட்டத்தில் காணப்படுவதாகவும் அந்த துறையின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முதலீட்டு உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த விஜயத்தின் போது முயற்சிக்கப்பட உள்ளதாக கட்டாருக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் டபிள்யூ.எம். கருணாதாச தெரிவித்துள்ளார்.



Comments