மக்களின் சுகாதார பிரச்சினை குறித்து மைத்திரி!
மக்களின் சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் நச்சுத்தன்மையுடன் கூடிய கிருமிநாசினிகள், பீடைக்கொல்லிகள் தொடர்பில் மாற்று வழிமுறைகளை கண்டறிவதற்கு விஞ்ஞானிகளும் தொழில்நுட்பவியலாளர்களும் கவனம் செலுத்த வேண்டு என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தாமரை தடாகம் கலையரங்கில் நேற்று பிற்பகல் இடம் பெற்ற 2016-ம் ஆண்டு விஞ்ஞான தொழில்நுட்ப மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,
இன்று நாட்டில் கிருமிநாசினிகள் மற்றும் பீடைகொல்லிகளின் காரணமாக அப்பாவியான மக்கள் முகங்கொடுத்துள்ள சிறுநீரக நோய் தேசம் என்ற ரீதியில் நாம் முகங்கொடுத்துள்ள ஒரு பாரிய அனர்த்தமாகும்.
நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு விஞ்ஞானிகளும் தொழில்நுட்பவியலாளர்களும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புக்கள் குறித்து இது போன்ற மாநாடுகளில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டு என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமது ஆராய்ச்சி, அறிவுத் திறன்கள், அனுபவங்களைப் பயன்படுத்தி நாட்டின் தேசிய உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment