Posted by
Kantalai News
தாய் சித்தி ஜனீரா மற்றும் மகள் ஜனீரா பானு ஆகியோர் கொல்லபட்ட சம்பவம்.. இன்று ஜனாசாக்கள் பிரேத பரிசோதனைக்காக.

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் 2 பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டமை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருிகின்றன.
ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி முதலாவது ஒழுங்கையில் தாயும் மகளும் ( நூர்முஹம்மது சித்தி ஜனீரா (வயது 55) மற்றும் அவரது மகளான ஜனீரா பானு மாஹிர் (வயது 34 ) ஆகியோரே )
கொலை செய்யப்பட்டு சடலங்களாக மீட்கப்பட்டனர்
55 வயதான தாயும் 32 வயதான மகளுமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.
நீண்ட காலமாக தாயும் மகளும் வீட்டில் வசித்து வந்துள்ளதுடன், உயிரிழந்த மகளின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் பணி புரிந்து வருவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
வீட்டின் கூரை கழன்றுள்ளதால் சந்தேகநபர்கள் கூரையை கழற்றி வீட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தடயவியல் நிபுணர்களும் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
நீதவான் விசாரணைகளை அடுத்து ஜனாசாக்கள் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்..
