கந்தளாயில் பத்துவயது சிறுவன் துஷ்பிரயோகம்: சந்தேக நபர் கைது




திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பத்து வயதுடைய சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) உத்தரவிட்டார்.
கந்தளாய், வாத்தியாகம பகுதியைச் சேர்ந்த 26வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் சிறுவனை வீட்டுக்கு அழைத்து யாருமில்லாத சந்தர்ப்பத்தில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் அதன் பின்பு சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வைத்தியர் சிறுவனிடம் காய்ச்சல் பற்றியும் உடல் நிலை பற்றியும் கேட்டவுடன் சிறுவன் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விடயத்தையும் தெரிவிக்க பின்பு பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சனிக்கிழமை (10) சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபரை பொலிஸார் விசாரணைகளின் பின் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Comments